“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”

மகாராஷ்டிராவில் கைதான போலீஸ் அதிகாரியின் கடிதத்தை வைத்து, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சிவசேனா எம்.பி குற்றச்சாட்டு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தரக்கோரி மும்பை போலீசாரை கட்டாயப்படுத்திய புகாரில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே-வை என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் நீதிபதியிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

அந்த கடடிதத்தில், பதவி இழந்த உள்துறை அமைச்சர்அனில் தேஷ்முக் மீதும், சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப் மீதும் முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.

இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில்”-

“சிறை கைதியிடம் இருந்து கடிதம் எழுதி வாங்கும் புதிய போக்கு தற்போது நிலவி வருகிறது. இதற்கு முன்பு நாடு எப்போதும் இதுபோன்றதொரு அழுக்கு அரசியல் நடத்தப்படுவதை பார்த்ததில்லை.அரசியல் கட்சியின் தொழில் நுட்ப பிரிவு மற்றும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு சிறை கைதிகளின் கடிதங்களும் பயன்படுத்தப்படுகிறது. மகா விகாஷ் அகாடி கட்சியின் உறுதித்தன்மையை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது.

எனக்கு அனில் பரப்பை நன்றாக தெரியும். அவர் ஒரு தீவிரமான சிவசேனா தொண்டர். பால் தாக்கரே பெயரில் ஒருபோதும் அவர் தவறாக சத்தியம் செய்ய மாட்டார்” என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

More News >>