இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை, முதல் அலையை காட்டிலும், அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 79 ஆயிரத்து 608 பேர் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கொரோன சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 642- ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது.