உலக அளவில் 13.44 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை காட்டிலும், தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13.44 கோடியாக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி:-

உலகம் முழுவதும் 134,498,425 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,914,168 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 108,297,856 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 23,286,401 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,714,328 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5,73,819 ஆக அதிகரித்துள்ளது. குணமானோர் எண்ணிக்கை 24,271,372 ஆக உள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,286,324 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 345,287 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,732,193 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,057,954 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 167,694 ஆக உயர்ந்துள்ளது. குணமானோர் எண்ணிக்கை 11,910,741 ஆக அதிகரித்துள்ளது.
More News >>