ஐபிஎல் போட்டியில் பும்ரா மனைவி சஞ்சனாவின் சர்ப்ரைஸ்!
8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. முதல் ஆட்டம் சென்னையில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்ததால் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று துவங்கி அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் மே 30-ந்தேதி அரங்கேறுகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கியவர் மயாந்தி லாங்கர். இவர் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னியின் மனைவி. இந்நிலையில் மயாந்தி, சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்டதால் இந்த முறை அவர் போட்டிகளை தொகுத்து வழங்கவில்லை. அவருக்குப் பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸின் முக்கிய தூணாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பும்ராவும், சஞ்சனாவும் சில தினங்கள் முன்பு தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றவர்கள் தற்போது மீண்டும் தங்களின் பணிக்கு திரும்பியுள்ளனர். இந்த சஞ்சனா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.