கண்ணே கலங்கிவிட்டார் கோலி – நேற்றைய ஆட்டத்தில் அப்படி என்னதான் நடந்தது?
நேற்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2021 போட்டிகள் களைகட்ட தொடங்கியுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் காட்டிய அதிரடியால் பெங்களூர் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் இறங்கினர். முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டினர். பின்னர் ரோகித் சர்மா 19 ரன்களிலேயே ரன் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது. . இதையடுத்து,160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர். 2 வது பந்தில் கேட்ச் சில் இருந்து தப்பிய வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் 8 ரன்னில் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து விராட்கோலியும் அவுட்டாக, ஏபிடி அதிரடி காட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியில் குர்ணால் பாண்டியா பேட்டிங் செய்த போது, கைலி ஜாமிசன் ஓவரில் அவர் அடித்த பந்து ஒன்று நேராக கோலிக்கு கேட்ச் சென்றது. முகத்தை நோக்கி வந்த பந்தை கோலி கணிக்க தவறினார். பந்து கோலியின் கையில் வேகமாக பட்டு, கண்ணுக்கு கீழே அடித்தது. இதில் அவரின் கண் கலங்கி போனது.வேகமாக வந்து பந்து பட்டதில், கோலியின் கண்ணுக்கு கீழ் பெரிதாக வீங்கி, சிவந்து போனது,. ஒரு நொடி அவரின் கண் மொத்தமாக கலங்கி, நிலைகுலைந்து போனார்.
பின் சுதாரித்துக் கொண்ட அவர் தொடர்ந்து பீல்டிங் செய்தார். நேற்று இவரின் கண்ணில் பிரச்சனை எதுவும் இல்லை.சோதனையில் கோலியின் கண்ணுக்கு பாதிப்பு இல்லை, கண்ணுக்கு கீழ் கன்னம் அருகே லேசான ரத்த கட்டு இருப்பதாக கூறப்படுகிறது.