அரசின் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கு காரணமாக மும்பையில் சாலைகள், தெருக்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை, முதல் அலையை காட்டிலும், அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 376 பேர் பலியானார்கள். மும்பையில் நேற்று 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் கொரேனா பரவலை கட்டுப்படுத்த மும்பை நகரில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசின் உத்தரவை அடுத்து மும்பை நகரில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால், மரைன் டிரைவ் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த ஊரடங்கு திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்களை மட்டும் போலீசார் அனுமதிக்கின்றனர்.

More News >>