சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல்.. ஆனால்?!.. அடித்துச் சொல்லும் வீரப்பன் மகள்!
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கே.என்.ஆர்.ராஜா என்பவா் தயாரித்துள்ள' மாவீரன் பிள்ளை' படத்தில் முதல்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறாா். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ள நிலையில் விஜயலட்சுமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து "நல்ல கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்க தனக்கு ஆர்வம்" இருப்பதாகவும் தெரிவித்தாா்.
மேலும் அவரின் தந்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தனது தந்தை வாழ்ந்த சத்தியமங்கலம் பகுதியில் பணப் புதையல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பாகபேசப்பட்டு வருகிறது. விழாவில் பேசிய அவர், ``அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், அம்மாவின் அனுமதி வாங்கி நிச்சயம் அதை எடுப்பேன். அவரின் உண்மை கதை, இன்னும் படமாக்கப்படவில்லை.
செய்திகளில் வந்ததை வைத்து படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம், சத்தியமங்கலம் காட்டில் இருக்கிறது. ஆனால், இப்போது அது செல்லாது. மேலும் அது எங்கு இருக்கிறது என யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. காரணம், அது அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்" என்றுள்ளார்.