மிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பரம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரா்களை வியப்பில் ஆழ்த்துயுள்ளது.
கிரிக்கெட் களம் மற்றும் பொது இடங்களில் மிகவும் அமைதியாக அறியபடும் ராகுல் டிராவிட் விளம்பரங்களில் நடித்து வருவது வழக்கம்.அவர் தற்போது நடித்துள்ள கிரெடிட் கார்ட் கட்டணங்களைச் செலுத்தும் 'கிரெட்' இணையத்தளம் மற்றும் ஆப் விளம்பரத்தில் நடித்துள்ளா். இந்த விளம்பரம் தான் தற்போது அவரை நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்ட் செய்ய வைத்து வருகிறது.
தனது அமைதியான செயல்பாடுகள் காரணமாக மிஸ்டர் கூல் என்ற பெயரெடுத்த டிராவிட், தனது சுபாவத்துக்கு மாறாக அந்த விளம்பர்த்தில் மிகவும் கோபத்துடன் வசனங்களைப் பேசி நடித்துள்ளதும், காரின் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கப்படும் காட்சிகளில் நடித்து இருப்பதும் தான் நெட்டிசன்கள் ராகுல் டிராவிட்டை ட்ரெண்ட் செய்வதற்கு காரணம். இதுபோன்ற விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மற்றம் இன்றி இந்திய கிரிக்கெட் அணியின், வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டிராவிட்டின் இந்த விளம்பர வீடியோவை பகிர்ந்து ``ராகுல் பாயின் இந்த முகத்தை ஒருபோதும் பாா்த்ததில்லை" என்று விராட் கோலியும் ``ராகுல் சார், யாரோ ஒருவர் மோசமான காயம் அடையப் போகிறார்" என்று நடராஜனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.