வெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்?
இந்த புதுவகையான வாழைப்பழம் வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.
வாழைப்பழம் என்றால் மஞ்சள் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், செவ்வாழை பார்த்திருப்போம், சாப்பிட்டிருப்போம். வாழைப்பழங்கள் மிகவும் சத்தானதாக இருப்பதால் உலகம் முழுவதும் பிரபலமானவை. அவை, ப்ளூ ஜாவா என்று அழைக்கப்படும் நீலநிற வாழைப்பழங்கள் தான். இந்த வாழைப்பழங்களின் தோல் நீலநிறத்திலும் உள்ளே கிரீமி அமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த பழத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும். சுவாரஸ்யமாக, இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40F ஆகும். சமீபத்தில், ட்விட்டர் யூசர் தாம் கை மெங் என்பவர் தான் இந்த அரியவகை வாழைப்பழம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் பலர் வியப்பில் ஆழ்ந்தனர். இது எப்படி சாத்தியமானது என்று பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல ஹைபிரிட் செய்யப்பட்டிருந்தாலும் இந்த பழத்தின் சுவையானது ஊட்டச்சத்திலிருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லவில்லை.