உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அனுபமா
கேரளத்தின் திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர் அனுபாமா. 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.
தமிழ் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
கொடிபடத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு, பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இவர், தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார் அந்த படங்களும் தோல்வியை சந்தித்தன. தற்போது இவர், அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் அனுபாமா, ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அனுபாமா, அவ்வப்போது நெஞ்சை அள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வைரலாகும்.
தற்போது இவர் உதட்டை குவித்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.