கொரோனா தடுப்பூசி போட போறீங்களா?? அப்போ நீங்க இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..
தடுப்பூசி மையத்தில் நிகழக் கூடிய விசயங்கள் மற்றும் தடுப்பூசி போட்ட பின் செய்ய வேண்டியவை பற்றி விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சாரங்களின் மூலம் நாடு முழுவதும் கொரனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தியா தனது மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 2.36 ஆண்டுகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் போட தடுப்பூசி போட 3.4 ஆண்டுகள் ஆகும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை இந்தியாவில் தடுப்பூசி திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. வரும் மாதங்களில், நாட்டின் பிற பகுதிகளும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதால், நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் யோசனையில் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.
COVID-19 சிகிச்சையைப் பெறுபவர்கள் அல்லது சமீபத்தில் கொரனா பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து தடுப்பூசி பெறுவதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிக்குப் பிறகு, உடனடி கடுமையான அலர்ஜி மற்றும் எதிர்விளைவைக் காண தடுப்பூசி மையத்தில் நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள். தடுப்பூசிக்கு எந்தவொரு உடனடி கடுமையன எதிர்வினையும் தனிநபர் காட்டாவிட்டால் மட்டுமே, அவர்கள் தடுப்பூசி மையத்தை விட்டு வெளியேற முடியும்.
இதே வேகத்தில் போனால், இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட 10.8 ஆண்டுகள் மற்றும் முழு மக்கள்தொகையை ஈடுகட்ட 15.4 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது,