2020ம் ஆண்டு மார்க் ஜூக்கர் பெர்க் பாதுகாப்புக்கு மட்டும் 171 கோடி செலவு!

கடந்த 2020ம் ஆண்டு மட்டும் மார்க் ஜூக்கர் பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 171 கோடியை செலவு செய்துள்ளது பேஸ்புக். இந்த தகவல் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும் பேஸ்புக் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி, அதற்கான செயலியை உருவாக்கி, அதன்மூலம் இளைஞர் பட்டாளம் முதல் அனைவரையும் தனது வாடிக்கையாளராக கொண்டிருப்பவர் மார்க் ஜூக்கர் பெர்க். பேஸ்புக்கில் ஆரம்பித்த அவரது பயணம், வாட்ஸ்அப் என நீண்டுகொண்டே போகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் உறுதி செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

அதன்படி சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் மார்க் ஜூக்கர்பெர்கின் தனிப்பட்ட மற்றும் அவர் குடியுள்ள வீட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளதாம். அதோடு கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பொதுமுடக்கம், அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணத்தினால் பாதுக்காப்பு செலவுகள் கூடி உள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் அறிந்த முகம் என்பதால்தான் இந்த ஏற்பாடு எனவும் ஃபேஸ்புக் விளக்கம் கொடுத்துள்ளது.

More News >>