ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை விலை பேசும் வால்மார்ட்- இந்தியாவில் கால் பதிக்க அச்சாரம்!

சர்வதேச அளவில் வர்த்தக சந்தையில் முன்னணி இடத்தைக் கைப்பற்ற வால்மார்ட் நிறுவனம் தனது திட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த உள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரும் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 51 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் போட்டியிட்டு ஜெயிப்பதற்காகவே வால்மார்ட் இத்தகைய வணிக திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுவது மட்டும் உறுதியாகியுள்ளது.

மே முதல் வாரத்தில் வால்மார்ட் நிறுவனம் தற்போதைய சந்தை நிலவரப்படி 1800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குதாரர்களுள் ஒருவரான சாஃப்ட்பேங்க் நிறுவனத்திடமிருது அதிகாரப்பூர்வமாக வாங்குகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>