இந்தியாவில் மேலும், 1,61,736 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தினம்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத்தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். கொரேனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 97,168 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 12,64,698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 25,92,07,108 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று 14,00,122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.