ஆஞ்சநேயர் எங்கு பிறந்தார் என்று தெரியுமா?

ஆஞ்சநேயர் எங்கு பிறந்தார் என்பதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன. அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் `மச்சவல்லபன், `சுறவக்கொடியோன் என்று தமிழிலும், `மகரத்வஜன் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார்.

ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள சேஷாசல மலைத்தொடரில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்தது. அவர்கள் பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.

அதன்படி ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை இன்று தெலுங்கு வருட பிறப்பான உகாதியன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தேவஸ்தானம் சார்பில் வரும் 21 ஆம் தேதியான ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

More News >>