ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்..!
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்..!தெலங்கானா மாநிலத்தில் வனப்பதிக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைத்த வனத்துறை அதிகாரியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சிந்தகுப்பா என்ற கிராமம் அமைந்துள்ளது. அக்கிராம மக்கள் சிலர் , வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது.
வனப்பகுதி ஆக்கிரமிப்பை அறிந்த வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர் சிந்தகுப்பா கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்பதற்காக நிலத்தை அளந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கிராம மக்கள், அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் தாக்க தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் மீட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலுக்கு உள்ளான வனத்துறை அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவர்களை தாக்கிய பொதுமக்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் மூன்றுபேரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.