சுதந்திரத்தை மையப்படுத்தி உருவாகி வரும் பிரமாண்ட கதை - ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம்!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் 2014-ல் வெளியான கத்திக்குப் பின், அவர் இந்தியில் இயக்கிய அகிரா (2016), தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் (2017) இரண்டும் சுமாராகவே போனது. 2018-ல் இயக்கிய சர்கார் லாபத்தை தந்தாலும் கிரியேட்டராக முருகதாஸுக்கு எந்த பெருமையையும் சேர்க்கவில்லை.தற்போது முருகதாஸ் லைகாவின் ராங்கி படத்தின் கதையை எழுதியுள்ளார். இதில் த்ரிஷா நடிக்கிறார்.
மேலும் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் உடன் விஜய் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக தளபதி 65 படம் ஏ.ஆர். முருகதாஸின் கைநழுவி போனது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு தான் ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கி வரும் புதிய படம். '1947' என்கிற டைட்டிலுடன் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை. அதற்கு பதிலாக பிரபல தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பாட் உடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குநர் பொன் குமரன் இயக்கி வருகிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிக் கண்டுள்ளார். 1947 எனும் டைட்டிலும் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்த வரலாற்று கதையாக உருவாகிறதா? அல்லது வேறு கதையா? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. விரைவில் படம் குறித்தும் அதில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தும் முறைப்படி அறிவிக்க உள்ளனர்.