உச்சத்தை நோக்கி பெட்ரோல், டீசல் விலை - ரூ.80 அளவுக்கு உயர்வு

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றம் பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன.

ஆனால், பாஜக அரசனாது, கடந்த 2017, ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்குப் பின்னர் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே தவிர குறையவில்லை.

திங்கட்கிழமையன்று விற்பனையான பெட்ரோல், டீசல் விலை [1 லிட்டர்] நிலவரம்:

சென்னை: பெட்ரோல் 77.29 காசுகள், டீசல் 69.37 காசுகள்.கோவை: பெட்ரோல் 75.68 காசுகள், டீசல் 66.86 காசுகள்.திருவள்ளூர்: பெட்ரோல் 78.47 காசுகள், டீசல் 71.33 காசுகள்ஓசூர்: பெட்ரோல் 78.77 காசுகள், டீசல் 73.12 காசுகள்மதுரை: அதிகபட்சமாக பெட்ரோல் 80.54 காசுகள், டீசல் 73.12 காசுகள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கடும் சிரமத்திற்கு ஆழ்த்தி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், விலையில் பாதிக்கும் அதிகமான தொகை, மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரியாகவே உள்ளது.

உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என இவ்வருட தொடக்கத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கையை விடுத்தது. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதனை நிராகரித்துவிட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>