பெரிய நாட்டில் ஒன்றிரண்டு பாலியல் பலாத்காரங்கள் நடப்பது சகஜம்தான் - பாஜக அமைச்சர் அருவருப்பு
இவ்வளவு பெரிய நாட்டில் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்று மத்திய பாஜக அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் இயக்கத்தினர் கோவிலுக்குள் பூட்டிவைத்து பலாத்காரம் செய்த சம்பவமும், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட சம்பவமும் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில், “இவ்வளவு பெரிய நாட்டில் ஒன்றிரண்டு வல்லுறவுச் சம்பவங்கள் நடப்பது சகஜம்தான்; இதற்கெல்லாம் மக்கள் பீதி அடையக் கூடாது” என்று மோடி அரசின் மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார்.
மேலும், “இதுபோன்ற நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை என்றாலும், அவற்றைத் தடுக்க முடியாது. இது தொடர்பாக தேவையற்ற பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்த வேண்டாம்; அது சரியானது அல்ல” என்றும் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com