14 வயது சிறுமியை பண்ணை வீட்டில் அடைத்து தொடர் பலாத்காரம் செய்த வி.எச்.பி. பிரமுகர் கைது
திரிபுராவில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான அகில் பாரத் அகண்ட விகாஷ் தலைவர் மனோஜ் கோஷ் (58) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில், தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன்படி, பிப்ரவரி மாதம் தொழிலதிபர் ஒருவர் தன்னை கொவாய் மாவட்டத்தில் டெலியமுரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
பின்னர், அந்த சிறுமியை தொடர்ந்து 11 முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என அவர் தன்னை மிரட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பி 76 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான ‘அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத்’ என்ற அமைப்பின் தலைவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்போ, அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com