இரவில் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்... உடனடி தீர்வு காணலாம்..

தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான மெலடோன் மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான மெக்னீசியம் இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.

மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும். தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.

இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது. அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.

More News >>