பாலிவுட் செல்லும் ஷங்கர்.. ரன்வீர் உடன் கைகோர்ப்பு!
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது.
பேச்சு வார்த்தைக்குப் பிறகு பட்ஜெட்டை குறைத்தார் ஷங்கர். அதன்பின் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டது. இதன்பின் தயாரிப்பு நிறுவன பிரச்னை மீண்டும் எழ படம் நிறுத்தப்பட்டது.
இதனால் கமல் விக்ரம் படத்தில் நடிப்பதில் பிஸியாக, ஷங்கர் ராம்சரண் இணையப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று ஷங்கர் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தமுறை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்துள்ளார் ஷங்கர். அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர் அதில் தான் ரன்வீர் சிங் ஹீரோவாக விக்ரம் ரோலில் நடிக்கிறார்.
பிரமாண்டமாக உருவாக இருக்கும் ஷங்கர் படத்தை பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 மத்திய பகுதியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் விரைவில் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.