சாவில் தான் எத்தனை கொடுமை மக்களே!... இது தென்காசி துயரம்

இன்று மாலை நாலு மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஈஸ்வரன் என்பவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் அவர் உயிரிழந்ததை அறியாத அதே ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் ஈஸ்வரனின் உடலை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் கீழே இறக்கி வைத்து விட்டு ஓடிவிட்டார்.

பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் ஈஸ்வரனை பரிசோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டார் என உறுதி செய்தனர். பின்னர் அவரை பிணவறை கொண்டுவந்தனர். ஆனால் அதில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வாய் சரியாக பேச முடியாதவர். மற்றொருவர் பணி நேரத்தில் அதிக மது குடித்துவிட்டு படுத்துவிட ஈஸ்வரன் உடலை வெளியே மழையில் வைத்துவிட்டனர்.

உடல் மழையில் நனைந்தவாறு அருகில் இருக்க கலைஞர் குலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இசக்கி முத்து என்பவர் பிணவறை ஊழியர்களிடம், ``உடல் நனைந்து நனைந்து கொண்டிருக்கிறது. அவரை ஏன் உள்ளே எடுத்து வைக்கவில்லை" என்று கேட்க, `நீங்கள் பேர் சீட்டு வாங்கிட்டு வாங்க.. உள்ளே தூக்கிகொண்டு செல்வதற்கு ஆள் இல்லை. வேண்டுமென்றால் நீங்கள் தூக்கிக்கொண்டு வையுங்கள்" என்று மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அந்த நபருடைய பெயர் கணேசன். இதற்கு முன்னால் இதே இதே மாதிரி அதிக முறை மாறுதலாகி சிவகிரி சென்று மறுபடி இப்போது வந்திருக்கிறார் கணேசன். இவரின் பணியை ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

சாவில் எத்தனை கொடுமை மக்களே!

More News >>