குக் வித் கோமாளி... நன்றி மக்கா!
குக் வித் கோமாளி... இந்தப் பெயர் தான் இன்றைய நாளில் தமிழர்கள் பலரின் ஸ்ட்ரெஸ் பஸ்டர். நிச்சயம் இதனை மறுக்கமுடியாது. ஷோவில் குக்குடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டை, சில நேரங்களில் செப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு சேர்ந்து செய்யும் லூட்டிகள் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. வடிவேல் இல்லாத குறையை இந்த வருடம் இவர்களே குறைத்தார்கள். இன்று இந்த ஷோவின் கிராண்ட் ஃபினாலே.
இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக எந்தவொரு ரியாலிட்டி ஷோவையும் இதுவரை தமிழர்கள் கண்டிருக்க மாட்டார்கள். குறிப்பாக இதன் Grand Finale. மதியம் 2 மணி முதல் இரவு 7.30 வரை நகராமல் இருக்க வைத்துள்ளது. இந்த நேரத்தில் குக் வித் கோமாளி குழுவுக்கு தமிழர்கள் சார்பில் நாம் நன்றி சொல்வோம்.
காரணம், ஸ்கிரிப்ட் எழுதுவது எவ்வளவு கடினமோ அவ்வளவு சிரமம் அதை பிம்பத் தொடராக கொண்டு வருவது. ப்ரொடக்ஷன் அசிஸ்டெண்ட் முதல் லைட்மேன் தொட்டு கேப்டன் ஆஃப் த ஷிப் ஆன இயக்குநர் வரை இந்த வெற்றியை அடைய குறிப்பாக மக்களை சிறிக்க வைக்க பேய்த்தனமாக உழைத்திருக்கிறார்கள்.
ஷோவில் ஒரு கட்டத்துக்கு பிறகு ஸ்கிரிப்ட் டைரக்ஷன் கேமரா ட்ரூப்பில் இருந்து முழு ஷோவையும் குக்கர்ஸ் & கோமாளிஸ் ஹைஜாக் செய்து விட்டார்கள். என்னவொரு ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். தளத்தை சுத்தப்படுத்திய பணியாளர்கள் முதல் இந்த ரியாலிட்டி ஷோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்.
Ego X Alter ego கான்செப்ட் இதற்கு முன் அறிந்த வரை தமிழில் வேறு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இந்தளவு பதிவாகவில்லை. கொரோனா பொது ஊரடங்கால் ஏற்பட்ட அக / புற அழுத்தங்களுக்கு மிகச்சிறந்த வடிகால் ஆகத் திகழ்ந்தது.
நன்றி குக் வித் கோமாளி குழுவினரே.. மீண்டும் வாங்க மக்கா...