5 ஜி வசதி: விலையில் பல்வேறு சலுகைகள்: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்

காமிரா லென்ஸுக்காக ஹாஸெல்பிளாட் நிறுவனத்திடம் ஒன்பிளஸ் இணைந்து செயல்படுகிறது. காமிரா நிறுவனத்துடன் ஸ்மார்ட்போன் நிறுவனம் இணைந்து செயல்படுவது இதுவே முதன்முறையாகும்.

தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ AMOLED (1080X2400 பிக்ஸல் தரம்)இயக்கவேகம் : 8 ஜிபி மற்றும் 12 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபிசெல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 16 எம்பி + 5 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)பிராசஸர்: ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 870 இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஆக்ஸிஜன் ஓஎஸ் 11மின்கலம்: 4500 mAhசார்ஜிங்: 65 W வார்ப் சார்ஜ்

ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் 8ஜிபி + 128 ஜிபி வகை ரூ.39,999/- விலையிலும் 12 ஜிபி + 256 ஜிபி வகை ரூ.43,999/- வகையிலும் கிடைக்கும்.

எஸ்பிஐ கிரடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ரூ.2,000/- உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஏப்ரல் 14 முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வாங்குவோருக்கு 6 மாத காலத்திற்கு செலவில்லா மாதாந்திர தவணை வழங்கப்படும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மூலம் வாங்குவோருக்கு 10 சதவீதம் கேஷ்பேக் உண்டு. ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் இசட் 18 சதவீத தள்ளுபடியிலும் ஒன்பிளஸ் பேண்ட் 19 சதவீத தள்ளுபடியிலும் கிடைக்கும்.

More News >>