ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பென் ஸ்டோக்ஸ் – என்ன காரணம்?!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார் பென்ஸ்டோக்ஸ்.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஐ.பி.எல் போட்டியின் 14-வது சீசன் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொரோனா பாதிப்பின் காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டைப் போல பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு இடது கையில் அடிபட்டது. அதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது இடது கை எலும்பு முறிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிதனர். இதனால் ஐ,பிஎல் போட்டியில் தொடர்ந்து பென்ஸ்டோக்ஸ் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அவர்ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் குறித்த ராஜஸதான் அணி ட்விட்டர் பக்கத்தில், கடந்த போட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகுகிறார். அவர், தொடர்ந்து ராஜஸ்தானுடன் இணைந்து இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல உதவினார் பென்ஸ்டோக்ஸ். ஏற்கெனவே, ராஜஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>