`தந்தையாக இருப்பது பேரானந்தம்!- இது ராபின் உத்தப்பாவின் மறுபக்கம்
இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, 'ஒரு தந்தையாக வாழ்வது பேரானந்தம் கொடுக்கிறது' என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவர் ராபின் உத்தப்பா. ஆனால், அவருக்கு பின்னர் அணிக்கு வந்த கோலி, ரஹானே போன்றவர்கள் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தனது வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் மெர்சல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் உத்தப்பா. அவரின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டம் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் மணமுடித்த உத்தப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்காக குழந்தையை பிரிந்து உத்ப்பாவால் இருக்க முடியவில்லை. எனவே, தனது மனைவி ஷீத்தல் மற்றும் குழந்தையையும் உடனேயே பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இது ஐபிஎல் வட்டாரத்தில் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து உத்தப்பாவிடம் கேட்டபோது, `என் குழந்தையைப் பிரிந்து என்னால் இருக்க முடிவதில்லை. ஒரு அப்பாவாக இருப்பதும் கிரிக்கெட் விளையாடுவதும்தான் என் வாழ்க்கையில் மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள்.
ஒரு தந்தையாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை என் மகன் திறந்து வைத்துள்ளான். இது பேரானந்தம் தரும் அனுபவம்’ என்றுள்ளார் உருகியபடி.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com