உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறியா... கொரோனா ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சி!

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இன்று வரை விலகியபாடில்லை. தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா. ஆரம்பத்தில் இதற்கான தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில், தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் தற்போதுதான் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. முதல் அலையை விட தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருந்துவருகிறது. இந்தநிலையில்,கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனோம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கொரோனா தொடர்பாக குழப்பதுடனும் மனநிறைவுடனும் பேசுகிறோம் என்றால் கொரோனா பாதிப்பு முடிவடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும். " என்றார்.

இதற்கிடையே, கொரோனா தொடர்பாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட கைசர் பெர்மனென்ட் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்குவதோடு அவர்களை மரணப்படுக்கை வரை கொண்டு செல்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

அதேநேரம், வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது, மற்றும் தீவிர உடல்நலமின்மை போன்றவற்றில் இருந்து தப்பிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

More News >>