5000 ஆப்ஸ்களுடன் 32 அங்குல ஆண்ட்ராய்டு சோனி டிவி அறிமுகம்

பிராவியா 32W830 என்ற தொலைக்காட்சியை சோனி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல இந்தத் தொலைக்காட்சி 5000 செயலிகள் கொண்ட முதல் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

எச்டிஆர் பிச்சர் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியில் சத்தத்தை குறைப்பதற்காகவும் காட்சியை தெளிவாக்குவதற்காகவும் எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ என்ற சிறப்பம்சம் உள்ளது. இயற்கையான ஒலியை மற்றும் தரமான படத்தை அளிப்பதற்கு டோல்பி ஆடியோ அம்சம் உள்ளது. இதில் கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆகியவை இணைந்தே வருகின்றன.

ரூ.30,990/- விலையுள்ள இந்த ஸ்மார்ட் டிவி சோனி மையங்கள், முன்னணி எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் அனைத்து இகாமர்ஸ் இணையதளங்களிலும் விற்பனையாகிறது.

More News >>