உறைந்த ஏரியில் நடனம் ஆடும் பஞ்சாபியரின் வீடியோ வைரல்!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தில் கனடா வாழ் இந்தியர் ஒருவர் உறைந்த ஏரியில் நடனமாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா உட்பட உலகெங்கிலும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் கனடிய வாழ் இந்தியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாடும் வகையில் நடனமாடி அதனை இணயத்தில் பகிர்ந்துள்ளார். பலர் தரையில் நடனமாடுவதற்கே சிரமப்படும் வேலையில், குர்தீப் தனது அற்புதமான பங்க்ரா திறன்களை உறைபனி ஏரியில் நின்று வெளிப்படுத்திய விதம் பார்ப்போரை வியக்க வைத்தது. இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் 28K-க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான ரீட்வீட்களை பெற்றுள்ளது.

மேலும், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டது குறித்து அவர் தனது வீடியோ பதிவில், "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நான் தூய்மையான இயற்கையின் அன்னையின் ஒரு உறைந்த ஏரிக்குச் சென்றேன். அங்கு மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆகியவற்றிற்காக பாரம்பரிய பஞ்சாபி பங்க்ரா நடனத்தை ஆடினேன். இதை நான் கனடாவிற்கும் அதற்கு அப்பால் உள்ள அனைவரின் ஆரோக்கியத்திற்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று கேப்ஷன் செய்துள்ளார்.

ஏற்கனவே குர்தீப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி தனது தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பிறகு இதேபோன்று நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. மேலும், 3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது. தற்போது அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>