தலைகாயத்துடன் வந்த நபருக்கு காலில் ஆபரேஷன் செய்த அபூர்வ டாக்டர்
சாலை விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்த நபருக்கு காலில் ஆபரேஷன் செய்த டெல்லி அரசு டாக்டரின செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில், சாலை விபத்து மற்றும் தலைக்காய அவசர சிகிச்சைக்காக ‘சுருஷ்ட்டா டிராமா சென்டர்’ என்ற சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த வியாழக்கிழமை அன்று சாலை விபத்தில் தலையில் அடிப்பட்டு ஒருவரை அனுமதிக்கப்பட்டனர். அப்போது, இவருக்கு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர், அவருக்கு வலது காலில் துளையிட்டு ஒரு உலோக இணைப்பை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளார்.
பின்னர் தான், மயக்கத்தில் இருந்த நபருக்கு தலைக்கு பதிலாக காலில் ஆபரேஷன் செய்த விஷயம் மருத்துவ நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இதேபோல், முன்னதாக செய்த ஆபரேஷன் ஒன்றிற்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டுபிடிக்ப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, பிற டாக்டர்களின் துணை இல்லாமல் அவர் இனி தனியாக ஆபரேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com