உச்சநீதிமன்ற நீதிபதியை கவர்ந்த தி கிரேட் இந்தியன் கிச்சன்!

சமீபத்தில் வெளியான மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய இந்த படம் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடமும் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட படமாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்து படம் அழுத்தமாக பதிவு செய்திருந்தது. படம் பார்த்த பல பிரபலங்களும் அதை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இந்தப் படத்தை சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ``சமீபத்தில் கிரேட் இந்தியன் கிச்சன் படம் பார்த்தேன். திருமணம் முடிந்து மருமகளாக வரும் பெண் தனது புகுந்த வீட்டில் வேலைகள் செய்வது, ஊதியமில்லாத அந்த வேலை குறித்த நன்றி மறக்கும் குடும்பத்தினர் மத்தியில் எழும் கோபங்களை இப்படம் பட்டியலிட்டுள்ளது. மாதவிடாயின் போது தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்வது என பெண்கள் சுதந்திரம் குறித்து படத்தை மிக ஆழமாக எடுத்துள்ளார்கள்” என்று பாராட்டியுள்ளார். இதை படத்தின் இயக்குனர் ஜியோ பேபி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More News >>