பாகிஸ்தானை விட்டு உடனே வெளியேறுங்கள்... பிரான்ஸ் நாடு அறிவுறுத்தல்!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஆசிரியர் ஒருவரை அவரின் மாணவரே தலையை துண்டாக வெட்டி கொலை செய்தார்.. அந்த ஆசிரியர் பெயர் சாமுவேல் பட்டி. வரலாற்று ஆசிரியரான இவர், பாடம் நடத்துகையில் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதாக கூறப்படுகிறது. இதில் முஸ்லீம் மாணவரான அப்துல்லா அன்சோரவ் (18) கோபமடைந்து ஆசிரியரை கொடூரமாக தாக்கி தலையை வெட்டிக் கொலை செய்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்தப் பிரச்னை தற்போது மத பிரசனையாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் நாடே இந்த செயலால் கொதிப்படைந்துள்ளது. மேலும், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இஸ்லாமிய பயங்கரவாதம், வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி கூறியுள்ளார். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட, பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கொலையாளியான சிறுவன் அப்துல்லாவுடன் தொடர்பிலிருந்ததாக கூறி பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும், செசன்ய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரில் ஒருவருடன் 17 வயது சிறுமி தொடர்பு வைத்திருந்திருந்ததாக கூறி அந்த சிறுமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் மத வன்முறையாக மாறி பிரான்ஸை உலுக்கி கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்துக்கு பின் தற்போது, பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் சமீபத்தில்
முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கான ஒரு பத்ரிகைக்கான உரிமை ஒப்புதல் அளித்தார். ஆனால் இதற்கு எதிராக, இது கடவுள் நிந்தனை என்று பாகிஸ்தானிய வலதுசாரி கட்சியான தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அவருடைய கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பாகிஸ்தானில் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்த இதன்பின்னே பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் கிளர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.