கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்து குடல் வற்றி கொக்கு செத்த கதை திமுக கதை - ஜெயக்குமார்

கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு குடல் வற்றி இறந்த கதைதான் திமுக கதை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”தேர்தல் நேரத்தில்தான் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும். அதை கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவை அம்மா எப்படி கட்டுக்கோப்பாக நடத்தினாரோ அதே கட்டுக் கோப்புடன் இன்றைக்கும் நடத்தப்படுகிறது. கூட்டணி குறித்து தனிப்பட்ட ஒருவர் முடிவு செய்ய முடியாது” என்றார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, ‘அவர் சொல்வதை பார்க்கும்போது கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு குடல் வற்றி இறந்த கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. எப்பொழுது கடல் வற்றுவது, எப்போது கருவாடு சாப்பிடுவது. திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது.

அம்மாவின் அரசை வெளிப்படையான நிர்வாகம் என்ற அளவில் நடத்திக் கொண்டிருக்கிறோம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். காமாலை கண்டவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர்களுக்கு அதே பார்வை தான் இருக்கிறது. காவிரிக்காக ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். திமுக போராடுவதை விமர்சிக்க மாட்டேன்’ என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>