ரஜினி படத்தின் பெயரை மாற்ற முடிவு

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் திரைப்படத்தின் பெயரை மாற்ற திரைக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மலையாள பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் பார்வதி ஆகியோரின் மகன் காளிதாஸ். இவர் தனது 7 ஆம் வயதில், 2003 ஆம் ஆண்டு நடித்த எண்டே வீடு அப்புவிடேயும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றார்.

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், இயக்குநர் பாலாஜி தரணிதரன் தனது இரண்டாவது படமான ஒரு பக்க கதை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதுதவிர புத்தம் புது காலை, பாவக்கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமாகியிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் இவர், அடுத்ததாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார்.

இப்படத்திற்கு மலையாளத்தில் ரஜினி என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால், இப்படத்திற்கு ரஜினி ரசிகன் என தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More News >>