நடிகர் விவேக் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் உண்டா?

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ``அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயம் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் நேராது. அனைவரும், முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்" எனப் பேசியிருந்தார்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. . இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட விவேக்கிற்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் அவரை அனுமதித்துள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எனினும் தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுதொடர்பாக சிம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், “சுயநினைவு இல்லாத நிலையில் குடும்பத்தினரால் நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வல்லுனர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போதைக்கு அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளது. உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல இது மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை”என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>