`அது தான் முக்கியம் இது அல்ல – யோகிபாபுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!

நடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பின் போது தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து யோகிபாபு மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ்சினிமாவில் குறுகிய காலத்திற்குள் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் யோகிபாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் இருக்கும் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் நிறைய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதோடு யோகி பாபு மற்றும் அஜித் இதுவரை மூன்று படங்களில் பணியாற்றியதால் ஒரு நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார் யோகிபாபு. பொதுவாக அஜித்துடன் பணியாற்றுபவர்கள் அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்படித்தான் யோகிபாபுவும் அஜித் தனக்கு வழங்கிய அறிவுரையை வெளியுலகத்துக்கு கூறியுள்ளார்.

அண்மையில் ஒரு ஆன்லைன் மீடியா நேர்காணலில் பேசிய யோகிபாபு, அஜித் தனது முந்தைய படங்களின் போது தனது திருமண தேதி குறித்து விசாரித்ததை நினைவு கூர்ந்தார். அதோடு விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை அடிக்கடி வற்புறுத்தினாராம். இதையடுத்து திருமணம் முடிந்து 'வலிமை' படப்பிடிப்புக்கு சென்ற யோகி பாபுவை, அரவணைத்து வரவேற்று, 'குடும்பம் முக்கியம்' என்று அறிவுறுத்தினாராம் அஜித். இத்தகவலை தற்போது யோகி பாபு பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அஜித் சொல்வது மட்டுமல்லாமல் அவரது குடும்ப வாழ்க்கையில் அதீத கவனம் செலுத்தக்கூடியவர். 'அமர்களம்' படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது ஷாலினியை காதலித்து மணந்துக் கொண்டார். திரைப்பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் தவறாமல் நேரத்தை செலவிடுவேன் என்று ஷாலினிக்கு அஜித் வாக்குறுதி அளித்துளார். அதனை தவறாமல் காப்பாற்றியும் வருகிறார்.

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் 'வலிமை' படத்தின் முதல் தோற்றம் மே 1-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More News >>