ஈஸி... வென்னிலா ஐஸ் க்ரீம் ரெசிபி..nbsp
ஐஸ் கிரீம் பிடிக்காதவர்கள் என்று யாரவது இருப்பார்களா ?.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு பட்டியலில் கண்டிப்பாக ஐஸ் கிரீமிற்கு முதல் இடம் உண்டு. அதுவும் வெயிலுக்கு சில்லுனு ஐஸ் கிரீம் சாப்பிட்டால் தானே கோடைக்காலமே முழுமையடையும்.. சரி வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ் கிரீம் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா ??
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப் பால் பவுடர் - 1 கப் (இனிப்பில்லாதது) ப்ரஷ் க்ரீம் - 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது) வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும். பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com