ஃபிலிம்ஃபேர் டூ பத்மஸ்ரீ விருது – சாதனைகளை குவித்த நடிகர் விவேக்!

திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்.

தமிழில் வெளியான ரன் திரைபடத்திற்க்காக 2002ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதேபோல, 2003ம் ஆண்டு வெளியான சாமி, 2004ம் ஆண்டு வெளியான பேரழகன், 2007ம் ஆண்டு சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார் விவேக்.

உன்னருகே நானிருந்தால் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிக்கருக்கான விருதை பெற்றிருந்தார். தொடர்ந்து, ரன், 2003ம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு, சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. குரு என் ஆளு படத்துக்கான சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.

படிக்காதவன் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏசியா நெட் திரைப்பட விருது, ஐடிஎஃப் ஏ விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

விவேக்கின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

கோபால்!!! கோபால்!!!

எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.

நான் எஸ்.ஐ-யா இருக்கேன்

More News >>