மேற்குவங்கத்தில் சலசலப்பு இன்றி நடைபெறும் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிற்து. இதுவரை 4 கட்ட வாங்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்ட 15,789 வாக்குச்சாவடிகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெறும் 45 தொகுதிகளில் 17 தனித் தொகுதிகள், 3 பழங்குடி தொகுதிகள். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 45 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் வென்றது.
நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இன்றைய தேர்தலில் கூர்க்காலாந்து விவகாரம் மிக முக்கியமானதாக இடம்பெறும்.