சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தவர் – விவேக்கிற்கு திரையுலகம் இரங்கல்!

நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. . அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் மறைவு செய்தியை கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

``விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

``விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

இயக்குநர் சேரன் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், ``எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

``சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் விவேக் என ரவீக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

``திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

``விவேக் நீங்கள் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள் என்பதை நம்பமுடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். பல தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்தீர்கள். எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள் என இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் விவேக் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More News >>