சஞ்சய் தத்தாக நடிக்கும் ரன்பீர் கபூர்hellip `சன்ஜூ படத்தின் டீசர் வெளியீடு!

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் 'சஞ்சு' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டும் அதில் நடிக்கும் நடிகர்களின் வாழ்க்கையும் என்றைக்கும் சர்ச்சையை விட்டு விலகியதில்லை. சல்மான் கான், ஷாருக் கான் தொடங்கி ஹிரித்திக் ரோஷன் வரை இதுதான் தொடர் கதை. இந்த பட்டியலில் சஞ்சய் தத்துக்கும் தனி இடம் உள்ளது.

சிறு வயதில் போதை மருந்து பயன்படுத்தியது, மும்பை கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைப் பெற்றது என சர்ச்சைகளின் மன்னராகவே இன்று வரை வலம் வந்து கொண்டிருப்பவர் சஞ்சய் தத். தற்போது அவரின் வாழ்க்கையை மையப்படுத்தி `சன்ஜூ’ என்ற தலைப்பிட்ட திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திரைப்படம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரன்பீர் கபூரின் அசாத்திய நடிப்பாலும், நேர்த்தியான ஒப்பனையாலும் டீசரில் வருவது சஞ்சய் தத்தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

 

More News >>