கார் ஓட்டும்போது போன் பேசுவதற்கு கூகுளின் புதிய வசதி

எந்த வாகனத்தையும் ஓட்டும்போது அலைபேசி அழைப்புகளை ஏற்றுப் பேசுவதோ, மற்றவர்களை அழைத்துப் பேசுவதோ ஆபத்தான ஒன்று. அப்படி பேசுபவருக்கு மட்டுமல்ல; எதிரே வாகனத்தில் வருபவர்களுக்கும் அது ஆபத்தாக முடியும்.

வாகனம் ஓட்டுபவர் எளிதாக அழைப்புகளை ஏற்று பேசுவதற்கும், குறுஞ்செய்திகளுகு (text) பதில் அளிப்பதற்கும் கூகுள் நிறுவனம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 9.0 அல்லது அதற்கு மேலான வடிவத்தை கொண்ட, 4 ஜிபி இயக்கவேகம் கொண்ட மொபைல்போன்களில் இந்த வசதி செயல்படும்.

இதற்கு கூகுள் மேப்பில் 'டிரைவிங் மோடு' என்ற வசதியை தெரிவு செய்யவேண்டும். வாகனம் ஓட்டுபவர், தாம் செல்லவேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் தெரிவு செய்த பிறகு, அதில் வரும் பாப்-அப் மூலம் இந்த வசதியை பெறலாம். அசிஸ்டெண்ட் வசதி மூலமாகவும் இதைப் பெறலாம். அல்லது "ஹே கூகுள், ஓப்பன் அசிஸ்டெண்ட் செட்டிங்க்ஸ்" என்று கட்டளையிட்டு, பிறகு "டிரான்போட்டேசன்" என்பதை தெரிவு செய்து அதன் பின்னர் "டிரைவிங் மோடு" என்ற வசதியை செயல்பட வைக்கலாம்.

வாகனம் ஓட்டுபவர் வழிக்கான திரையிலிருந்து கண்களை விலக்காமல் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியும். குரலை பயன்படுத்தியே அழைப்புகளை மேற்கொள்ளலாம்;குறுஞ்செய்திகளை அனுப்பலாம். வரும் குறுஞ்செய்திகளை கூகுள் அசிஸ்டெண்ட் வாசிக்கும். குறுஞ்செய்திகளை வாசிக்க வாகனம் ஓட்டுபவர் போனை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று அழைப்புகள் வரும்போது அறிவிக்கை வரும். பயனர் குரலை பயன்படுத்தியே அழைப்புகளை ஏற்க அல்லது மறுக்க முடியும்.

இந்தியாவில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்தாலும், சாலை பாதுகாப்பே முக்கியம்; நம் உயிருக்கும் மற்றவர்கள் உயிரும் ஈடு செய்ய முடியாதவை என்ற காரணத்தால் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

More News >>