வராத அஜித், விஜய்... விவேக் மரணத்தை வைத்து மல்லுக்கட்டும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகத்தை, ரசிகர்களை உலுக்கியுள்ளது. திரைப்பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் மறைவு செய்தியை கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
``விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். ``விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். இயக்குநர் சேரன் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், ``எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இரங்கல் தெரிவித்ததோடு பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். சூர்யா, ஜெயம் ரவி என பல பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல பிரபலங்கள் நேரில் வரவில்லை. கொரோனா கால சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் அவர்கள் வராததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த நடிகரும் என்ன காரணம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.
ஆனால் ரசிகர்கள் அஜித் விஜய் வராததை வைத்து இணையங்களில் விவாதம் செய்கின்றனர். அஜித் எஸ்.பி.பி மரணத்திற்கு வராததை வைத்து சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.