உடல் நச்சுகளை அகற்றும் நல்ல மூலிகை டீ அருந்துங்கள்
உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் சில பழக்கங்களை கடைபிடிப்பது நல்லது. அவற்றுள் ஒன்று மூலிகை தேநீர். தொடர்ந்து சில மூலிகைகள் நம் உடலில் சேர்ந்து வந்தால் தேவையற்ற ஆரோக்கிய குறைபாடு நம்மை தொந்தரவு செய்யாது. அதுவும் கோடைக்காலத்தில் உடலை நாம் கவனமாக பராமரிப்பது அவசியம். பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு நம் உடலில், வயிற்றில் தங்கும் நச்சுப்பொருள்களே காரணமாகின்றன. அவ்வப்போது அகற்றை அகற்றினால் உடலை நலமாக பராமரிக்கலாம்.
செரிமானம் நமக்கு முக்கியம். செரிமானம் நன்றாக நடந்தால் ஆரோக்கியம் காக்கப்படும். உடலில் தங்கியுள்ள நச்சுகள் அகற்றப்படும். நச்சுகள் அகற்றப்படும்போது, ஆற்றல் அதிகமாகும்; மனம் தெளிவடையும். செரிமானத்தை தூண்டி, உடலிலுள்ள நச்சுகளை அகற்றும் டீ ஒன்றை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்.
தேவையானவை: நீர் - 1 லிட்டர், சிவப்பு மிளகு - 1 சிட்டிகை, இஞ்சி - அரை அங்குல அளவு, இந்துப்பு (பாறை உப்பு) - 1 தேக்கரண்டி, வெல்ல சாறு - 2 மேசை கரண்டி, எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை: எலுமிச்சை சாற்றை தவிர, அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு, சில நிமிடங்கள் ஆற விடவும். ஆறிய பிறகு வடிகட்டி, அதற்குள் எலுமிச்சையை சாறு பிழியவும். வெதுவெதுப்பான நிலையில் பருகவும்.
இந்த டீ, உடலிலுள்ள நச்சுகளை அகற்றுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.