IPL கிரிக்கெட் தொடர் : பெங்களூரு அணி “ஹாட்ரிக்” வெற்றி
IPL கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
14 வது IPL கிரிக்கெட் போட்டியின் 10 வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்தார். இதையடுத்து, விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வீச்சில் கோலி 5 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரஜத் படிதர் 1 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து, தேவ்தத் படிக்கல்லுடன், கிளைன் மேக்ஸ்வெல் கைகோர்த்தார். மேக்ஸ்வெல் பந்துகளை மைதானத்தின் நான்கு புறங்களிலும் சிதறடித்து, 28 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது.
டிவில்லியர்ஸ் 76 ரன்களுடனும், கைல் ஜாமிசன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் , அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்களில் கொல்கத்தா 8 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பெங்களூரு அணி தொடர்ச்சியாக 3 வது வெற்றியை பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் முதல் 3 ஆட்டங்களில் பெங்களூரு அணி வெற்றி கண்டிருப்பது இதுவே முதல் முறை.