“ஓய்வில் மு.க.ஸ்டாலின் – விவேக் இறப்பில் அரசியல் செய்யும் தொல்.திருமாவளவன்”

நடிகர் விவேக் இறப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசியல் செய்வதாகவும். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில்லாமல் கொடைக்கானலில் ஓய்வெடுப்பதாகவும் பாஜக தலைவர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.

நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பலத்தரப்பினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்தநிலையில், விவேக்கின் மரண செய்தியை கேட்டு, திமுக இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னை விந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விவேக்கின் இறப்பை வைத்து பலர் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு தரப்பினர் தடுப்பூசி குறித்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்னொரு தரப்பினர் விவேக்கின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “நடிகர் விவேக்கின் மரணத்தை திருமாவளவன் அரசியல் செய்கிறார். திருமாவளவன் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் நடிகர் விவேக்கைப் போலவே நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். எனவே பொய் பிரச்சாரங்கள் செய்யவேண்டாம்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் ஓய்வெடுகிறார்" என்று பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

More News >>