இஸ்ரேலில் வாடகை செக்ஸ் சிகிச்சை
இஸ்ரேல் நாட்டில் சிகிச்சை முறைகளில் வாடகை துணைவியரை பயன்படுத்தி பாலியல் உறவு மூலம் சிகிச்சை அளிக்கும் முறை பிரபலமாக உள்ளது.
திருமணத்தை தாண்டிய உறவு வைப்பது விபச்சாரம் என்று மதங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரை பாலியல் துணைவராகப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. அதில் ஒரு நாடுதான் இஸ்ரேல்.
பாலியல் மறுவாழ்வுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ரோனித் அலோனி. இவர், நியூயார்க்கில் படித்துக்கொண்டிருந்த போது வாடகை துணைவியார் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. 1980-க்கு பிறகு இஸ்ரேலுக்கு திரும்பிய இவர், வாடகை துணைவியர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு, மூத்த மதகுருமார்களுடன் அனுமதி கோரியுள்ளார். அதற்கு மதகுருமார்கள், இதில் திருமணமான ஆண்கள், பெண்களை பயன்படுத்தக்கூடாது என்ற கட்டளையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்பின் இஸ்ரேல் அரசே இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் ரோனித் அலோனியின் மையம், வரவேற்பு அறை, அறிவுரை வழங்கும் அறை மற்றும் படுக்கை அறை என மூன்று பிரிவுகளை கொண்டது.
வரவேற்பு அறை வழக்கம்போல், வாடிக்கையளர்கள் அமர சொகுசான சோபாக்களை கொண்டிருக்கும். அறிவுரை அறையில் விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் உள்ளிட்டவை இருக்கும். அதற்கு அடுத்ததாக படுக்கை அறை, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மெது மெதுவென சொகுசு மெத்தை, பாட்டு கேட்பதற்கான கருவி, குளியல்அறை, சுவர்களில் பாலியல் உணர்வுகளை தூண்டும் புகைப்படங்கள் என இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதையும், இணைசேரவும் கற்றுக் கொடுப்பார்கள்.
இந்த மையத்தில் பாலியல் இன்பத்திற்கு இன்றி, பாலுறவு பிரச்சனை உள்ளவர்களுக்கும், பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மையத்திற்கு வெவ்வேறு வயதுடையை, வெவ்வேறு பின்புலம் உடையவர்கள் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள்,
இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்த முறையை அனுமதிக்கிறது. ராணுவ வீரர்கள் காயமடைந்து பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசாங்கமே சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்கிறது.
இணை சேர பாலியல் துணை இல்லாத நபர்களின் வாழ்க்கையில் உள்ள வெற்றிடத்தை வாடகை துணைவியர் மூலம் நிரப்புகிறோம் என்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் ரோனித் அலோனி.