கொரோனாவை விரட்ட பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங்கின் அட்வைஸ்!

கொரோனா தொற்றிலிருந்து மீள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது உயர்ந்துகொண்டேதான் இருக்கிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ``கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விஷயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. சரியான கொள்கை வடிவம் இருப்பின் இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் . கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்என குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதலான கொரோனா தடுப்பூசியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேலெழுந்துள்ளது.

More News >>