தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே முதவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடபட்டிருந்தது. தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு காரணமாக சிகிச்சை தள்ளி போடப்பட்டது.
இந்நிலையில், ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரத்தில், ``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக அவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றோ அல்லது நாளையோ அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படும். இதைதொடர்ந்து 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.